இந்தியாவில் சாலை விபத்துகளில் ஆண்டு ஒன்றுக்கு 1.5 லட்சம் மக்கள் உயிர் இழக்கிறார்கள். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் சாலை விபத்துகளில் 15,000 நபர்கள் உயிர் இழந்தனர். மேலும் பல ஆயிர மக்கள், காயம் அடைகின்றனர்.
சாலை விபத்துகளில் உயிர் இழப்பை தடுக்க, விழிப்புணர்வு மிக முக்கியமானதாகும்.
உங்களால் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு வாசகங்களை சில வார்த்தைகளில் எழுத முடியுமா? ஆம் என்றால் உங்கள் வாசகங்களை இந்த பகுதியில் பதிவிடவும்.
About 1.5 lakh lives are lost in road accidents every year in India. In Tamil Nadu, about 15,000 people were killed in road accidents last year. Creating awareness is important to reduce accidents. Can you create slogans in a few words and conveying the message on importance of road safety? If so please share them here.
SATHISHKUMAR 4 years 1 day ago
வண்டி ஓட்டு கவனமா
உன் குடும்பம் உயரும் சிகரமா......
PRIYANGAS 4 years 2 days ago
வாழ்கையில் முன்னேறி வருவதற்கு வேகம் வேண்டும்
வாகனத்தை முன்னேறுவதற்கு அல்ல
Charles P 4 years 2 days ago
இருசக்கர பயணம்
இருவருக்கும் தலைக்கவசம்
Akash 4 years 2 days ago
தலை கவசம் அணிவோம்
உயிர்களை காப்போம்
Aasaitamil Sakthivel 4 years 2 days ago
வாழ்க்கை பயணத்தில் வேண்டும் வேகம்
வாகன பயணத்தில் வேண்டாம் வேகம்
Aasaitamil Sakthivel 4 years 2 days ago
சாலை விதிகளை மதிப்போம்
சாலையில் விபத்தை தவிர்ப்போம்
SATHISHKUMAR 4 years 3 days ago
மனக்குழப்பத்தில் வாகனம் ஓட்டாதே
மாயம் ஆவாய் விழுந்து தேடாதே.
SATHISHKUMAR 4 years 3 days ago
ஒற்றை பாதையில்
ஓரமாய் ஓட்டு
இரட்டை பாதையில்
இடைவிட்டு தூரமாய் ஓட்டு
மூன்று பாதையில்
முழித்து ஓட்டு
நான்கு பாதையில்
விழித்து ஓட்டு.
SATHISHKUMAR 4 years 3 days ago
தூக்கத்தில் இயக்காதே வாகனம்
துலைந்து தான் அன்றே நீ போகனும்.
SATHISHKUMAR 4 years 3 days ago
தொடர்ச்சி பயணம்
தொலைவு பயணம்
தொடர்ந்து போகும்
அனைவரும் கவனம்.