இந்தியாவில் சாலை விபத்துகளில் ஆண்டு ஒன்றுக்கு 1.5 லட்சம் மக்கள் உயிர் இழக்கிறார்கள். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் சாலை விபத்துகளில் 15,000 நபர்கள் உயிர் இழந்தனர். மேலும் பல ஆயிர மக்கள், காயம் அடைகின்றனர்.
சாலை விபத்துகளில் உயிர் இழப்பை தடுக்க, விழிப்புணர்வு மிக முக்கியமானதாகும்.
உங்களால் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு வாசகங்களை சில வார்த்தைகளில் எழுத முடியுமா? ஆம் என்றால் உங்கள் வாசகங்களை இந்த பகுதியில் பதிவிடவும்.
About 1.5 lakh lives are lost in road accidents every year in India. In Tamil Nadu, about 15,000 people were killed in road accidents last year. Creating awareness is important to reduce accidents. Can you create slogans in a few words and conveying the message on importance of road safety? If so please share them here.
SATHISHKUMAR 3 years 11 months ago
விழிப்போடு இருந்திடு
சாலை விதிகளை மதித்து நடந்திடு....
SATHISHKUMAR 3 years 11 months ago
கனரக வாகனம்
பிறர் கடப்பதை பாக்கனும்...
SATHISHKUMAR 3 years 11 months ago
இடைவெளி விட்டு செல்
இல்லை உன் உயிரை அங்கு விட்டு செல்....
SATHISHKUMAR 3 years 11 months ago
இருசக்கர வாகனம்
இரண்டு பேரே போகனும்....
SATHISHKUMAR 3 years 11 months ago
முந்தி போக நினைக்காதே
முட்டி மோதி கிடக்காதே....
SATHISHKUMAR 3 years 11 months ago
மதுவோடு பயணம்
மிக மிக கவனம்....
SATHISHKUMAR 3 years 11 months ago
வழிவிட்டு போகனும்
நல்வழியை நாமே காட்டனும்....
SATHISHKUMAR 3 years 11 months ago
வேக தடை இருக்கும்
நீ வேகம் குறை நல்வழி பிறக்கும்....
SATHISHKUMAR 3 years 11 months ago
சாலை ஓரம் கவனம்
சாய்ந்து விட்டால் மரணம்....
SATHISHKUMAR 3 years 11 months ago
பொறுமையாக ஓட்டு
பொது இடங்களில் பாத்து...